நளினிக்கு மீண்டும் பரோல் நீடிப்பு

Must read

சென்னை:
ளினிக்கு மீண்டும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த டிசம்பர் 27-ம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்ட நளினி வேலூர் காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில், அவருக்கு மீண்டும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் நளினி விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் தமிழக ஆளுநரிடம் உள்ளது. இதுகுறித்து அவர் இன்னும் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த தீர்மானத்தின் மீது முடிவெடுக்குமாறு ஆளும் திமுக அரசும், எதிர்கட்சியான அதிமுகவும் ஆளுநரை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தகது.

More articles

Latest article