ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த ப்ராஜெக்ட்… பிப் 14 காதலர் தினத்தில் ரிலீஸ்…

Must read

தனுஷிடம் இருந்து பிரியப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து தனது இயக்க பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

ஸ்ருதிஹாசன் – தனுஷ் முத்தக்காட்சியால் பரபரப்பாக பேசப்பட்ட ‘3’ படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் காலடியெடுத்து வைத்த ஐஸ்வர்யா அதன்பின் கெளதம் கார்த்திக் நடிப்பில் ‘வை ராஜா வை’ படத்தை இயக்கினார்.

படக்குழுவுடன் ஆலோசனையில் ஐஸ்வர்யா

தற்போது ஆல்பம் சாங் ஒன்றை எடுத்து வரும் ஐஸ்வர்யா இந்த பாடலுக்கான படப்பிடிப்பை ஹைதராபாதில் உள்ள பிலிம் சிட்டி-யில் நடத்தி வருகிறார்.

காதலை மையமாக வைத்து எடுக்கப்பட இருக்கும் இந்தப் பாடலை பிப்ரவரி 14 ம் தேதி காதலர் தினத்தன்று வெளியிட திட்டமிட்டிருக்கிறார் ஐஸ்வர்யா.

ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் உள்ள சித்தாரா ஹோட்டலில் தங்கி இருக்கும் ஐஸ்வர்யா, பே பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த பாடலுக்கான கலைஞர்கள் மற்றும் லொகேஷன் தேர்வு குறித்து ஆலோசித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடைசியாக சினிமா வீரன் என்ற டாகுமெண்ட்ரி படத்தை இயக்கினார்.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் ‘சார்’ திரைப்படத்தில் நடித்து வரும் தனுஷ் அதே ஹோட்டலில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

More articles

Latest article