எக்சிட் போல் கணிப்புகள் இறுதி முடிவு அல்ல: நிதின் கட்காரி

Must read

நாக்பூர்:

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்து உள்ளார்.

நிதின் கட்கரி

நாடு முழுவதும் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தை கருத்துக்கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

மத்திய மந்திரி நிதின் கட்காரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை, மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று சுட்டிக்காட்டி வருகின்றனர். இதன் காரணமாக அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின்கட்கரி, இதுபோன்ற எக்சிட் போல் கணிப்புகள் இறுதி முடிவு அல்ல என்று தெரிவித்தார். மேலும், இந்த கருத்துக்கணிப்புகள் தேர்தல் முடிவை எதிரொலிப்பதாக அமைந்து உள்ளன. எனவே மத்தியில் மீண்டும் மோடி தலைமையில் புதிய அரசு அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

More articles

Latest article