துரை

டிகை அளித்த பாலியல் புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடைபெறுகிறது.

நடிகை சாந்தினி முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி இவ்டதாக புகார் அளித்தார்.   சென்னை காவல் ஆணையரிடம் அவர் அளித்த புகாரில் தானும் மணிகண்டனும் கணவன் மனைவியை போல் 5 வருடம் வாழ்ந்ததாகத் தெரிவித்தார்.   மேலும் அப்போது தாம் மூன்று முறை கர்ப்ப அடைந்ததாகவும் மிரட்டலால் கருவை கலைத்ததாகவும் கூறினார்.

அவ்வளவு நெருக்கமாக இருந்தும் தற்போது தம்மைத் திருமணம் செய்து கொள்ள மணிகண்டன் மறுப்பதாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சாந்தினி தனது புகாரில் தெரிவித்திருந்தார்.   இந்த புகாரின் அடிப்படையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.  முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் மனு செய்தார்.

அந்த மனு ரத்து செய்யப்பட்டதால் மணிகண்டன் தலைமறைவானார்.  பிறகு ஜூன் மாதம் 20 ஆம் தேதி  அவர் கைது செய்யப்பட்டு சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து புழ்ஹல் சிறைக்கு மாற்றப்பட்ட மணிகண்டன் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.   மேலும் சாந்தினிக்கு தாம் ரூ..5 லட்சம் கடன் கொடுத்திருந்ததாகவும் அதைத் திருப்பிக் கேட்டதால் கோவம் அடைந்து இந்த புகார் அளித்துள்ளதாகவும் மனுவில் தெரிவித்தார்.

இந்நிலையில் மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.  இதையொட்டி நேற்று முன் தினம் சென்னையில் அவரிடம் விசாரணை நடந்தது.  நேற்று அவரை மதுரைக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் அவரிடம் அங்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.  இன்றும் அவரிடம் விசாரணை தொடர உள்ளது.