சேலம்

திமுக ஆட்சியின் போது அப்போதைய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இல்லத்துக்கு 1500 கிலோ ஆவின் இனிப்பு இலவசமாக அனுப்பப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்ட ஆவடி நாசர் நேற்று சேலம் ஆவின் பல விற்பனை நிலையங்களில் திடீர் சோதனை நடத்தினார்.  நேற்று அதிகாலை முதல் 10க்கும் அதிகமான இடங்களில் சோதனை நடத்திய நாசர் முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.  பிறகு சேலம் ஆவின் பால் பண்ணையையும் ஆய்வு செய்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாசர், ”தமிழகத்தில் தற்போது பால் வரத்து 1.5 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது. மேலும் விற்பனையும் 1.5 லட்சம் அதிகரித்துள்ளது.  அரசுக்குப் பால்விலை குறைப்பால் ரூ.70 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  மேலும் கடந்த ஆட்சியில் 234 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது

முதல்வர் விரைவில் சத்துணவு மையங்களில் பால் உணவைச் சேர்ப்பது குறித்து  முடிவெடுப்பார்.  பால் விற்பனை நிலையங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான் கள ஆய்வு செய்வதன் மூலம் குறைகள் மற்றும் வளர்ச்சிக்கான தேவைகள் தெரிய வந்துள்ளது.  இனி பால் விற்பனையாளர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்

சேலம், தேனி, மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் பண்ணையில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது.  கடந்த அதிமுக  ஆட்சியில் அப்போதைய  ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு 1.5 டன் இனிப்பு ஆவினில் இருந்து இலவசமாக அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரம் உள்ளது. விசாரணையின் முடிவில் தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்: எனத் தெரிவித்துள்ளார்.