கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டாச்சார்யா உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

வயது முதிர்வு மற்றும் சுவாசப்பிரச்சினை காரணமாக சில நாட்களுக்கு முன்பு  கொல்கத்தா மருத்துவனையில்அனுமதிக்கப்பட்ட புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.  வயது மூப்பு காரணமாக பல்வேறு உடல் நலப்பிரச்னைகள் ஏற்பட்டுள்ள நிலையில், அவரது உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

புத்ததேப் பட்டாச்சார்யா (வயது 76) மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 2000ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்தார்.  வயது முதிர்வு காரணமாக, கடந்த 2018ம் ஆண்டு,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், மாநில கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் விலகியது குறிப்பிடத்தக்கது.