ரோடு

கூட்டணியில் இல்லை என்றாலும் பாஜகவின் சின்ன வீடாக அதிமுக இருப்பதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறி உள்ளார்.

நேற்று தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர், “எடப்பாடி பழனிச்சாமி கோடநாட்டில் நடந்த கொலை, கொள்ளையில் பெரும் பங்கு வகித்துள்ளார் என்பது விசாரணைக்குப் பிறகு முழுமையாக வெளிவரும்.  எனவே நீதிமன்றத்தில் தண்டிக்கப்படுபவர்களில் முதன்மையானவராக எடப்பாடி பழனிசாமி இருக்கப்போகிறார்.

நான் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும்போதே அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டினை சொல்லியுள்ளேன்.  தேர்தலில் பரப்புரையாற்றுகின்ற எடப்பாடி பழனிசாமிக்கு இதுதான் அநேகமாகக் கடைசி பரப்புரையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  அதிமுக கூட்டணியில் தற்போது பாரதிய ஜனதா கட்சி இல்லை என்று சொன்னாலும்கூட அதிமுக முழுக்க முழுக்க பாஜவின் அடிமையாக, சின்ன வீடாக இருக்கிறது என்பதை யாரும் மறுத்து விட முடியாது.

அதிமுக சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதியைப் பற்றிப் பேசுகின்ற தார்மீக உரிமையை அதிமுக இழந்து விட்டது.   இன்றைக்கு அதிமுகவினர் பெரியாரையும், அண்ணாவையும், எம்ஜிஆரையும் மறந்து விட்டார்கள்.  சில நாட்களில் ஜெயலலிதாவையும் மறந்து விடுவார்கள். பிறகு தமிழக மக்கள் முழுமையாக அதிமுகவை மறந்து விடுவார்கள்” .எனக் கூறினார்.