லைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.  இமயமலையில் இருக்கும் எவரெஸ்ட் சிகரம்தான் உலகிலேயே உயரமானது என்று படித்திருக்கிறோம்..  இதென்ன புதுக்கதை… என்று நினைப்பீர்கள்.
8,848 மீட்டர் உயரத்தைக் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தைவிட உயரமான மலை நம் பார்வையில் படாதுதான். ஆனால்…
குழப்பமாக இருக்கிறதா…
ஒரு மலையின் உயரம் எங்கிருந்து எங்கு வரை அளக்கப்படுகிறது என்பதில் இருக்கிறது சூட்சமம்.
கடல் மட்டத்திலிருந்து அளந்து பார்க்கும் போது எவரெஸ்ட் சிகரம் தான் மிகவும் உயரமான சிகரம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், இதுவே கடலினுள் காணப்படும் மலைகளுடன் ஒப்பீட்டுப் பார்க்கும் போது எவரெஸ்ட் சிகரம் உயர்ந்த மலையே அல்ல. ஆம் அதைவிட உயரமான மலைகள், கடலுக்குள் இருக்கின்றன.

மவுனா கேயா
மவுனா கேயா

ஹவாய் (Hawaii) தீவில் காணப்படும் மவுனா கேயா (Mauna Kea) என்கிற  மலை தான் மிகவும் பெரிதானது  என்று கண்டறியப்பட்டுள்ளது.  இந்த மலையின் சிறிய பகுதி தான் கடல் மட்டத்திற்கு மேலாகத் தெரிகிறது.  அதாவது, 4,207 மீட்டர்!
ஆனால் கடலுக்குள், மூழ்கியிருக்கும் இதன் பகுதி 10,205 மீட்டர். ஆக இது, எவரெஸ்ட் சிகரத்தை விட 1,357 மீட்டர் பெரியது.
கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. ஆராய்ந்து அறிவதே மெய்!