யோத்தி

நாட்டையே கொரோனா அச்சுறுத்தி வரும் வேளையில் இன்று ராமர் கோவில் கட்டுமானம்  தொடங்கி உள்ளது.

உச்சநீதிமன்றம் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்ததையொட்டி அதன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.  இந்த கோவில் கட்டுமானத்தை விஸ்வ இந்து பரிஷத் நடத்தி வருகிறது.   தற்போது இந்த இடத்தில் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அயோத்தியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.   அதையும் மீறி இன்று காலை கோவில் கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளது.  தற்போது இந்த இடத்தில் உள்ள சிலைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு கட்டிடத்துக்கு விரைவில் மாற்றப்பட்டுள்ளது.

சிலைகளுக்கான சிறப்புப் பூஜைகள் இன்றும் நாளையும் நடந்த பிறகு புதன் கிழமை அன்று தற்காலிக கட்டிடத்துக்கு மாற்றப்பட உள்ளது.  இந்த சிலைகள் கோவில் கட்டுமானம் முடியும் வரை அங்கேயே வைக்கப்பட்டிருக்கும்.  இன்றும் நாளையும் நடைபெறும் சிறப்பு பூஜைகள் ராமஜன்மபூமி கோவில் அமைப்புக்குழ்வினர் முன்னிலையில் நடைபெற்று வருகின்றன.