டில்லி

பிரதமர் மோடியின் செய்கைகள் முகமது பின் துக்ளக் போல் உள்ளதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜவகர் சர்க்கார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான் ஜவகர் சர்க்கார் 42 வருடங்கள் அரசுப்பணி புரிந்த மூத்த அதிகாரி ஆவார்.   இவர் இந்தியக் கலாச்சார செயலர், தூர்தர்ஷன் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார்.  அத்துடன் இந்திய ஒருமைப்பாடு மற்றும் ஜனநாயகம் ஆகியவை குறித்து கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்து வருகிறார்.

தற்போது கொரோனா வைரஸ் நாட்டையே அச்சுறுத்தலில் ஆழ்த்தி உள்ளது.  அதையொட்டி பல பணிக்கங்கள் மூடப்பட்டு உற்பத்தி முழுவதுமாகக் குறைந்துள்ளது.  இதனால் தற்போது பொருளாதாரம் மிகவும் சரிந்துள்ளது.  இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு ரூ. 20000 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜவகர் சர்க்கார், “கொரோனா காரணமாகச் சுகாதார அவசர நிலை உள்ள நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையின் பொழுதுபோக்கு, அலுவலகச் செலவுகளுக்காக  மோடி அரசு ரூ.20000 கோடி அளித்துள்ளது.  சரித்திரம் பிரதமர் மோடியை ஷாஹகான் என நினைவு கொள்ளாது.  ஆனால் முகமது பின் துக்ளக் என நினைவில் வைத்திருக்கும்” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.