‘எதற்கும் துணிந்தவன்’ பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

சூர்யா நடித்திருக்கும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்திருக்கிறார்.

டி. இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

எதற்கும் துணிந்தவன் படத்தின் ட்ரெய்லர் மார்ச் 2 ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காப்பான் திரைப்படத்திற்குப் பிறகு வெளியான சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் ஓ.டி.டி.யில் வெளியான நிலையில் சூர்யா நடிப்பில் 2 ஆண்டுகள் கழித்து திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது ‘எதற்கும் துணிந்தவன்’.