கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியானது.

மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் மார்ச் 11 ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.

தமிழில் தனுஷ் நடிப்பில் இதற்கு முன் வெளியான ஜெகமே தந்திரம் படமும் ஓ.டி.டி.யில் வெளியான நிலையில் இந்த திரைப்படமும் ஓ.டி.டி.யில் வெளியாக இருப்பது தனுஷ் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை தந்துள்ளது.

மாறன் படத்தில் தனுஷ் பத்திரிகையாளராக நடித்திருக்கிறார் இன்று மாலை வெளியான டிரெய்லர் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.