டில்லி:
புதிததாக அச்சடிக்கப்பட்டுள்ள 500 ரூபாய் நோட்டுக்களில் பெரும் பிழைகள் உள்ளன.
டில்லியில் அப்ஷார் என்பவர் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுக்களில் ஒன்பது வித்தியாசங்கள் இருந்தன. ஆனால் இதுவும் ஒரிஜினல் நோட்டுதான் என உறுதியாகியிருக்கிறது.
99
இப்படி பிழையான நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளதால் கள்ள நோட்டை கண்டுபிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்படும் என்று பொருளாதார அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த குழப்படி குறித்து விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி செய்தித் தொடர்பாளர் அல்பானா கில்லவானா, “அவசர அவசரமாக அச்சடிக்கப்பட்டதால் இப்படி தவறு நடந்துவிட்டது. மற்றபடி இவை செல்லத்தக்க நோட்டுகள்தான். , மக்கள் இந்த நோட்டுக்களை ஏற்றுக் கொள்ளலாம் “ என்று தெரிவித்துள்ளார்.