ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.  அங்க  திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் , அமமுக சார்பில் ஏ.எம்.சிவபிரசாந்த், தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழா் கட்சி சார்பில் மேனகா உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர்.

தேர்தலையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.  வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்காக மத்திய பாதுகாப்புப் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். இருந்தாலும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளதால் பல்வேறு புகார்கள்களும் பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தேர்தல் வாக்குப்பதிவு 27ந்தேதி நடைபெறுவதை முன்னிட்டு, வரும் 25ந்தேதி முதல் 27ந்தேதி வரை 3 நாட்கள் அந்த பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.