கோயம்புத்தூர்

திமுக தான் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி என எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்

அப்போது அவர்,

“கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றதை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். எனவே அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது தி.முக  அரசின் கடமை ஆகும்.

தற்போது தமிழகத்தில் அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி ஆகும். கடந்த 30 ஆண்டு காலமாகத் தமிழகத்தை க ஆட்சி செய்து, பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வந்து, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற கட்சி ஆகும். எனவே  யாருக்கு யார் எதிரானவர்கள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

தேர்தல் கூட்டணி விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. மாநில பிரச்சினைகளை வைத்தே தேசிய கட்சிகள் கூட அரசியல் செய்கின்றன. அதிமுக தமிழக மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.”

என்று தெரிவித்தார்.