சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளதால் அதிர்ச்சி அடைந்த எடப்படி தரப்பு, தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்து உள்ளது. தீர்ப்பு நகல் வந்தபின் சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து அடுத்தகட்டம், மேல்முறையீடு குறித்தெல்லாம் கட்சி தான் முடிவு செய்யும் என ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கில் இன்று காலை 11.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம்  பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதன்படி, ஜூலை 11ந்தேதி எடப்பாடி தரப்பு கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லாது என்று உத்தரவிட்டது.

மேலும், அதிமுக பொதுக்குழுவை கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்றும், தனிக்கூட்டம் கூட்டக்கூடாத என்று என்று கூறியதுடன், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.  எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும், பொதுக்குழுவை கூட்ட 30 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஆனால், அவ்வாறு அனுப்பதால் எடப்படி தரப்பு பொதுக்குழு செல்லாது என்று கூறியுள்ளது. மேலும்,  அதிமுகவில் ஜூன் 23ந்தேதிக்கு முந்தைய நிலைமையே தொடர வேண்டும் என்றும், ஜூன் 23ந்தேதிக்கு பிறகு நடைபெற்றது அனைத்தும் செல்லாதும் என்று கூறி உள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  தீர்ப்பானது,  ஓபிஎஸ் – க்கு ஆதரவு நிலை என்பது கிடையாது. 90 சதவீத கட்சியினர் ஒற்றைத் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனர். தீர்ப்பு நகல் வந்தபின் சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து அடுத்தகட்டம், மேல்முறையீடு குறித்தெல்லாம் கட்சி தான் முடிவு செய்யும். ஓபிஎஸ்-க்கு கிடைத்த வெற்றி நிரந்தரமானது அல்ல என தெரிவித்தார்.

சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.