சென்னை: பொதுமக்கள் சொத்து தொடர்பான வில்லங்கச்சான்றை இனிமேல் இ-சேவை மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழக பத்திரப்புதிவுதுறை இணையதளம் மேம்படுத்தப்பட்டு இருப்பதாகவும், இதன் காரணமாக பெரும்பாலான சேவைகள் ஆன்லைனில் வழங்கப்படுவதாகவும், , சொந்த தொடர்பான வில்லங்க சான்றிதழை போன்ற சேவைகளை பெற அலுவலகத்திற்கு நேரில் வருகை தர அவசியமில்லை. என்று பத்திரப் பதிவுத் துறை தலைவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
தமிழகத்தில் சொத்து வாங்குவோர், அது தொடர்பான முந்தைய பரிமாற்றங்களை அறிய, வில்லங்க சான்று பெறுவது அவசியம். பொதுமக்கள் நேரடியாக சார் – பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று வாங்குவதில் சிரமங்கள் ஏற்படுகிறது. மேலும் தரகர்களின் ஆதிக்கம், அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, சான்றிதழ் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இதையடுத்து, பதிவுத்துறையில் தேவையான ஆவணங்களை பெற பொதுமக்கள் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தி, விண்ணப்பிக்கும் நடைமுறையை பதிவுத்துறை அறிமுகம் செய்திருந்தது. அது, ற்போது மேலும் மேம்படுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி, பொதுமக்கள் சொத்து தொடர்பான வில்லங்கச் சான்று (Encumbrance Certificate – EC) இனி இ-சேவை மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என பத்திரப் பதிவுத் துறை தலைவர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாகாக அவர் வெளியிட்டுள்ள அறிவிபிப்ல், 19.8.21 முதல் அனைத்து இ-சேவை மையங்களிலும், வில்லங்கச்சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகல் கோரி பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆணையர், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
எனவே பொதுமக்கள் இ-சேவை மையங்கள் வழி நேரடியாக விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களையும் வழிமுறைகளின்படி மின்னொப்பம் இட்டு உடன் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டிருந்தது. இனி 1950-ம் ஆண்டு முதலே தமிழக அரசின் இணையதளமான https://tnreginet.gov.in/portal/ -ல் வில்லங்கம் பார்க்கலாம் என்றும், அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கான ஆவணங்களை பத்திரப் பதிவு – சார்பதிவாளர் அலுவலகங்களில் கட்டணம் செலுத்திதான் பெற முடியும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.