சென்னை: தமிழகத்திற்கு இன்று பிற்பகல்  மேலும் 5லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வர இருப்பதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்து உள்ளது.

கோரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என கூறப்படும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக்கப்பட்டு உள்ளன. தற்போது அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்திற்கு இதுவரை  2,74,07,600 டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன.  மத்திய அரசு ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு கொள்முதல் இரண்டில் இருந்து மொத்தமாக தமிழகத்திற்கு வந்த தடுப்பூசிகளில், கோவாக்சின் – 41,01,580 டோஸ், கோவிஷூல்டு – 2,33,05,250 டோஸ் என மொத்தம் 2,74,07,600 டோஸ்கள் வந்துள்ளன. இதில், நேற்று முன்தினம் (ஆகஸ்டு 22ந்தேதி) வரை  2,68,30,662 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தமிழகத்திற்கு இந்த மாத ஒதுக்கீட்டின்படி,  79 லட்சம் தடுப்பூசி வழங்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று  மேலும் 5,00,000 கோவிஷூல்டு தடுப்பூசி வருகிறது. இந்த தடுப்பூசிகள் இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் அதனை தேவைக்கு ஏற்றவாறு பிரித்து அனுப்பப்பட உள்ளனர்.

தமிழக அரசின் கையிருப்பில் 10,16,819 தடுப்பூசிகள் உள்ளது இந்த நிலையில் இன்று மேலும், இன்று கூடுதலாக 5,00,000 தடுப்பூசிகள் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.