டெல்லி:

தேர்தல் செலவுகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யாத குற்றத்துக்காக, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

81 தொகுதிகளைக்கொண்ட ஜார்கண்ட் சட்டமன்றத்துக்கு வரும் 30ந்தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி, அங்கு  அதன்படி முதல்கட்ட தேர்தல் நவம்பர் 30ந்தேதி நடைபெறுகிறது. 2வது கட்ட தேர்தல் டிசம்பர் 7ந்தேதியும், 3வது கட்ட தேர்தல் டிசம்பர் 12ந்தேதியும்,  4வது கட்ட தேர்தல் டிசம்பர் 16ந்தேதியும், 5வது கட்ட தேர்தல் டிசம்பர் 20ந்தேதியும் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை டிசம்பர் – 23ந்தேதி நடைபெற உள்ளது.

அங்கு தேர்தல்களம் சூடுபிடித்து உள்ளது. பாஜக தரப்பில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு, பரபரப்பான தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தேர்தல் செலவுகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யாத குற்றத்துக்காக, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம்  ஏற்கனவே தடை விதித்துள்ளது.

இதை எதிர்த்து, மது கோடா சார்பில், சட்டசபை தேர்தலில் போட்டியிட அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மது கோடா தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்க மறுத்து விட்டது.

இதன் காரணமாக மதுகோடா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகி உள்ளது.