தலைவர் விரும்பினால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி : உதயநிதி ஸ்டாலின்

Must read

ரியலூர்

திமுக தலைவர் முக ஸ்டாலின் விரும்பினால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகவின் தலைவர் முக ஸ்டாலின் மகனும் பிரபல திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுக இளைஞரணி மாநிலச் செயலாளர் பதவியில் உள்ளார்.   அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனைத்துக் கட்சிகளும் விருப்ப மனு பெற்று வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் பெயரில் சென்னை மேயர் பதவிக்குப் போட்டியிடப் பல வேட்பு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு அரியலூர் மாவடத்தில் உள்ள செந்துறைக்கு அருகில் அமைந்துள்ள குழுமூர்  என்னும் ஊருக்கு உதயநிதி ஸ்டாலின் வந்திருந்தார்.  அங்கு அவர் பல நிகழ்வுகளில்  கலந்துக் கொண்டார்.  அவற்றில் அந்த ஊர் நூலகத்தில் நடந்த ஒரு நிகழ்வும் அடங்கும்.

அந்த நிகழ்வில் நூலகத்துக்குப் புத்தகங்களை வழங்கிய உதயநிதி ஸ்டாலின் தன்னை நூலகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டர்.  அந்த வளாகத்தில் மரக்கன்றுகளை நட்ட உதயநிதி திமுக தலைவர் மு க ஸ்டாலின் விரும்பினால் தாம் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

 

More articles

Latest article