தமிழக சட்டமன்ற தேர்தல்: 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகளை நியமித்து உத்தரவு…

Must read

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி,  234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தேர்தல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழகத்தில் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. ஏற்கனவே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக  234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

தமிழகதலைமை தேர்தல் ஆணையாளர் சத்தியபிரதா சாஹு, 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டார்.  இந்த  பட்டியல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொகுதி வாரியாக தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிட்டுள்ளார்.

More articles

Latest article