சென்னை:

சென்னை அயனாவரம் பகுதியில் பானி பூரி தயாரிக்கும் நிறுவனத்தில் கொத்தடிமைகளாக வேலைப் பார்த்து வந்த 8 பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்களை குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழுவினர் அதிரடியாக மீட்டனர்.

சென்னை அயனாவரத்தில் அஜித் குமார்  என்பவருக்கு சொந்தமான பானி பூரி தயாரிக்கும் யூனிட் சபாபதி தெருவில் இயங்கி வந்தது. இவர் பீகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். தனது தொழிலுக்கு தேவையானவர்களை, சொந்த மாநிலமான பீகாரில் இருந்து அழைத்து வந்து அதிக வேலை வாங்கி கொடுமைப்படுத்தி வந்துள்ளார். பானி பூரி விற்பனை குறைந்தால், அந்த சிறுவர்களை அடித்து உதைத்து வந்துள்ளார்.

இவரிடம் சிக்கியிருந்த 8 சிறுவர்களில் 3 பேர் தப்பிச்சென்று, பூகாரில் உள்ள தங்களது பெற்றோர் களிடம் கூறியதைத் தொடர்ந்து, அங்குள்ள அதிகாரிகள் மூலம் சென்னை  செனாய் நகரில் அமைந்துள்ள குழந்தைகள் நல வாரியத்துக்கு புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து, குழந்தைகள் நல வாரிய  அதிகாரிகள், அயனாவரம் தாசில்தார் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு கொந்தடிமைகளை சிக்கியிருந்த மற்ற சிறுவர்களை மீட்டனர். மேலும்,பானிபூரி தொழில் உற்பத்தி செய்து வரும் அதன் உரிமையாளர் அஜித் குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் மீட்கப்பட்ட 8 சிறுவர்களும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அதிகாரிகள, இந்த ஆண்டு  நடைபெற்றுள்ள 2வது கொத்தடிமை மீட்பு இன்று என்று தெரிவித்து உள்ளனர்.