தேசியவாதம் கொழுந்துவிட்டெரியும் சர்ச்சைக்குரிய டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஹைதரபாத் பல்கழலைக் கழகம் ஆகியவை இந்தியாவின் தலைசிறந்த முன்னணி கல்வி நிறுவனங்களின் பட்டியலில் முதல்முறையாக இடம்பிடித்துள்ளது.
இந்தியாவின் தலைசசிறந்த் கல்வி நிறுவனங்களின் பட்டியலை இந்திய அரசின் கல்வி நிறுவன ஆணையம் பட்டியலிட்டுள்ளது. அதற்கான பட்டியலை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி இன்று ( ஏப்ரல் 4)இன்று வெளியிட்டார். கல்வி நிறுவனங்களை பொறியியல், மேலாண்மை, அறிவியல், மருந்தாளுகை என பல வகைகளில் பிரிக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஹைதரபாத் பல்கழலைக் கழகம் ஆகியவை  நாட்டின் சிறந்த 10 பல்கலைக் கழகங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
ranking 0
கற்பித்தல், கல்லூரியின் கட்டமைப்புத் தரம், ஆராய்ச்சி, ஆண்டுதோறும் வெளிவரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை, கற்கும் திறன் இவற்றை அளவுகோலாகக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் கொடுத்த   தகவல்களை தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு நிறுவனம் ஆய்வுசெய்து பட்டியல் தயாரித்துள்ள‌து. இந்த் ஆய்வு நிறுவனம் ம்னிதவளமேம்ப்பாட்டுத்துறையின் கீழ் செயல்படுகிறது.3500க்கும் மேற்பட்ட கல்வி நிறுவன‌ங்களை இந்த தரவரிசை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.
ranking 2
இந்தியாவில் சிறந்த 10 பொறியியல் கல்லூரிகள்
1.ஐஐடி, சென்னை
2.ஐஐடி, மும்பை
3.ஐஐடி, காராக்பூர்
4.ஐஐடி, டெல்லி
5..ஐஐடி, கான்பூர்
6.ஐஐடி, ரூர்கே

  1. ஐஐடி, ஹைதராபாத்

8.ஐஐடி, காந்தி நகர்
9.ஐஐடி, ரோபார்-ரூப்நகர்
10.ஐஐடி, பாட்னா
 நாட்டின் தலைசிறந்த 10 பல்கலைக்கழகங்கள்
1.ஐஐடி, பெங்களூரூ
2.இன்ஸ்ட்யூட் ஆப் கெமிக்கல் டெக்னாலாஜி, மும்பை
3.ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம். புதுடெல்லி
4.ஹைதராபாத் பல்கலைக் கழகம், ஹைதராபாத்
5.தேஸ்பூர் பல்கலைக்கழகம், தேஸ்பூர், அசாம்

  1. டெல்லி பல்கலைக்கழகம் , டெல்லி
  2. பனாரஸ் இந்து மதப் பல்கலைக்கழகம், வாரனாசி

8.இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
9.பிர்லா இன்ஸ்ட்யூட் ஆப் டெக்னாலாஜி, பிலானி
10.அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், அலிகார்.
அரசாங்கத்தால் முதன்முறையாக இந்தப்பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் இடம்பிடித்துள்ள ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலாவின்   தற்கொலைக்குப்பின் இப்பல்கலைக்கழகம் நாடு முழுவதும் பேசப்பட்டது.பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளால்தான்  வெமுலா தற்கொலை செய்துகொண்டதாக எதிர்க்கட்சிகள் உள்பட பலரும் குற்றம் சாட்டினர்.குறிப்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இதனால் பெரும் சர்ச்சைகளை எதிர் நோக்க வேண்டியிருந்தது.
அதேபோல் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர்  கன்ஹையா குமாரின் பல்கலைக் கழக உரையால்  அவரை  தேச துரோககுற்றச்சாட்டின்  கீழ்  கைது செய்தனர்.இதனால் நாடு முழுவதும் அனைத்து ஊடகங்களிலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தலைப்புச் செய்தியாக மாறியது.
2015 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள தலைசிற‌ந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை டைம்ஸ் இதழ் பட்டியலிட்டது.அதில் உலகின் 800 முன்னணி கல்வி நிறுவனங்களில் 17 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றிருந்தன. உலகளவில் முதல் 200 இடங்களில் 2 இந்திய கல்வி நிறுவனங்கள் மட்டுமே கடந்தாண்டில் இடம்பெற்றிருந்தன.தற்போது இந்தியாவே கல்வி நிறுவனங்களை தரவரிசைப் பட்டியலிடுவதால் உலக அளவிலான தரவரிசைப்பட்டியலில் அவை இடம்பெற உதவியாக இருக்கும் என மனிதவள அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.