வாஷிங்டன்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் (International Consortium of Investigative Journalism) நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது. 11.5 மில்லியன் தகவல் தரவுகளைத் திரட்டியுள்ளது. இந்த ஆவணங்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்கள் குழுவில் இந்தியாவின் சார்பில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளர்களும் இடம் பெற்றிருந்தனர். ஜூலை 2015 செய்து கொண்ட ஒப்பந்தப் படி 25 நிருபர்களை ஈடுப்படுத்தி, 76 நாடுகளில் உள்ள 375 நிருபர்களுடன் இணைந்து அரும்பணியாற்றி இந்த தகவல்களைத் திரட்டி உள்ளனர்.
உலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. இதுதான் ‘பனாமா பேப்பர்ஸ்’. விக்கிலீக்ஸ் மாதிரி இதுவும் ஒரு தகவல் கசிவு விவரம்.
பனாமாவில் பணம் முதலீடு செய்ய போலி நிறுவனங்கள் துவக்கம்:
ஸ்விஸ் வங்கிகளில் தனி நபர்கள் தங்கள் பெயரிலேயே வங்கி கணக்கு ஆரம்பிக்க முடியும். ஆனால் பனாமா வங்கியில் அது சாத்தியமில்லை. பனாமா வங்கியில் ஒருவர் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டுமானால் அந்நாட்டில் ஒரு தொழில் நிறுவனத்தை தொடங்க வேண்டும். அந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றுகூட அவசியமில்லை. அவ்வாறாக தொடங்கப்பட்ட நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் தொடர்ந்து பணத்தை சேமிக்கலாம். இதற்கு பெயர்தான் ஷெல் கம்பெனி (Shell Company).
ஸ்விஸ் வங்கிகளில் தனி நபர்கள் தங்கள் பெயரிலேயே வங்கி கணக்கு ஆரம்பிக்க முடியும். ஆனால் பனாமா வங்கியில் அது சாத்தியமில்லை. பனாமா வங்கியில் ஒருவர் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டுமானால் அந்நாட்டில் ஒரு தொழில் நிறுவனத்தை தொடங்க வேண்டும். அந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றுகூட அவசியமில்லை. அவ்வாறாக தொடங்கப்பட்ட நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் தொடர்ந்து பணத்தை சேமிக்கலாம். இதற்கு பெயர்தான் ஷெல் கம்பெனி (Shell Company).
panama 0
பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், டி.எல்.எப். உரிமையாளர் கே.பி.சிங், வினோத் அதானி ஆகியோர் பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
இது குறித்து,  2014-ல் பிரதமர் மோடி பதவி ஏற்றதும் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவின் துணைத் தலைவர், ஓய்வு பெற்ற நீதிபதி அரிஜித் பசாயத் கூறும்போது, “அமலாக்க இயக்குனரகம், வருமானவரித் துறை மற்றும் வருவாய் உளவு இயக்குனரகம் ஆகியவை இந்த பனாமா பட்டியலை ஆராய்ந்து இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பரிந்துரை செய்துள்ளோம்.
பனாமாவில் இந்திய நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் அடங்கிய சுமார் 500 முக்கியஸ்தர்கள் அடங்கிய ரகசிய பனாமா பேப்பர்ஸ் பட்டியலை உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு தீர விசாரிக்கும் என்று அதன் சேர்மன், முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தெரிவித்துள்ளார்.
panama 1a
மோடியின் ஆணைப்படி, மத்திய நேரடி வரி வாரியம் மற்றும் ரிசர்வ் வங்கி உட்பட பல அமைப்புகளின் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது .  வெளிநாடுகளில் உள்ள சட்டவிரோத நிதி இருப்புக்கள் அனைத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப் படும். பனாமா பேப்பர்ஸ் அம்பலப்படுத்திய பட்டியலில் உள்ள எவரும் நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
 உலக அளவில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், உட்பட, பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் சவுதி அரேபியா ராஜா. ரஷியன் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்,  மெஸ்ஸி உள்ளிட்டோரின் பெயர் வெளியிடப் பட்டுள்ளது.