எடப்பாடி வென்றது ஜனநாயகப் படுகொலை!: சீமான்

Must read

திருத்தணி:

எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது ஜனநாயகப்படுகொலை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

.
இதுகுறித்து பொன்னேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான் தெரிவித்ததாவது:

“சட்டசபையயில் ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
அமைச்சரவை பதவியேற்ற பிறகும் சட்டசபை உறுப்பினர்கள் அடைத்து வைக்கப்பட்டனர். இதிலிருந்து வெளியே ஓடிவிடுவார்கள், மாயமாகி விடுவார்கள் என்ற அச்சம் இருப்பது தெளிவாகிறது. உடனடியாக ஜனநாயக முறையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” என்றார்.
மேலும் அவர், “இந்த அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் தேர்வு செய்த அரசாக உள்ளது. முதல்வர் யார் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். ஆகவே இதை ஜனநாயக படுகொலையாக கருதுகிறேன்” என்று சீமான் தெரிவித்தார்.

More articles

Latest article