“முதல்வராகிறார் எடப்பாடி! 15 நாட்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு”

Must read

சென்னை,

வர்னர் சந்திப்பை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

அடுத்த 15 நாட்களில் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்று 11.30 மணிக்கு கவர்னர் எடப்பாடி பழனிச்சாமி 3வது முறையாக சந்தித்தார். அதையடுத்து, அவரை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆளுநர் வித்யாசகரை சந்தித்து புறப்பட்டுவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடியுடன் டி.டி.வி.தினகரன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்தனர்

இந்த சந்திப்பை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார். மேலும் 15 நாட்களுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்கவும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

More articles

Latest article