டில்லி:

டப்பு ஆண்டு இந்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் எதிரொலி, இந்தியா பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்து வருவதாக புள்ளியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, நிதி அமைச்சர் பதவியில் இருந்து நிர்மலா சீத்தாராமன் மாற்றப்படலாம் என தலைநகர வட்டார தகவல்கள் பரவி வருகின்றன.

மோடி தலைமையிலான கடந்த 5 ஆண்டு ஆட்சியின்போது, நாடு குறிப்பிட்ட தகுந்த அளவு பொருளாதார முன்னேற்றத்தை சந்திக்கவில்லை. ஜிஎஸ்டி, IBC சட்ட திருத்தங்கள், அன்னிய முதலீட்டுக் கொள்கை தளர்வுகள் போன்றவை பலன் கொடுக்காத நிலையில், மேக் இன் இந்தியா திட்டமும் கைகொடுக்கவில்லை.

இந்த நிலையில், மீண்டும் ஆட்சியைப் பிடித்த மோடி அரசு, ஏற்கனவே நிதி அமைச்சராக  இருந்த அருண்ஜெட்டி உடல்நலம் காரணம் காட்டி, பதவி ஏற்க மறுத்துவிட்ட நிலையில், முன்னாள்  பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீத்தாராமன் நிதி அமைச்சராக அறிவிக்கப் பட்டார்.

நடப்பு ஆண்டு நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், அடுத்த 5 வருடத்தில் இந்தியாவை 5 டிரில்லியன் மதிப்புடைய பொருளாதார நாடாக மாற்றுவோம் என்று அறிவிக் கப்பட்டு உள்ளது. ஆனால், குறியீடுகள் சரியாக தெரிவிக்கப்படவில்லை என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். மத்திய அரசு அறிவித்துள்ள   இலக்கை அடைய, ஆண்டுக்கு 10 விழுக்காடு வளர்ச்சித் தேவை.

ஆனால், தற்போது ஜனவரி – மார்ச் காலாண்டுக் காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.8 விழுக்காடு மட்டுமே. ஆனால்,  சர்வதேச அளவில் இந்தியாவை சிறந்த தொழில் புரியும் நகரமாக மாற்றுவோம் என்று மோடி தெரிவித்து வருகிறார்.

ஆனால், நிதி நிலை அறிக்கையில் திருப்தி இல்லை என்று நிதிஆயோக் பிரதமரிடம் முறை யிட்டதாக ஏற்கனவே செய்திகள் பரவின. மேலும் நிதிநிலை அறிக்கை மூதலீட்டை பெருக்கும் வகையில் இல்லை என பெரும்பாலான தொழிலதிபதிர்களும், தொழில் முதலீட்டாளர்களும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

மத்திய நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து, இந்திய  பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி,  விலைவாசி உயர்வு போன்றவையும் பிரதமருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் காரணமாக  மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய  யோசித்து வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் மத்திய அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்றும் பாஜக தலைமையக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, சில அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றப்பட உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் இருந்து நிதித்துறை பிடுங்கப்பட்டு, அதை பியூஸ் கோயலிடம் கொடுக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும், நிர்மலா சீத்தாராமனுக்கு வேறுஒரு துறை ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2018-19 ஆம் நிதியாண்டில் 7.4 சதவிகிதமாக இருக்கும் என்றும் 2019-20ஆம் நிதியாண்டில் 7.8 சதவிகிதமாக உயரும் என்றும் ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் கணிப்பு வெளியிட்டிருந்தது. அதுபோல, நடப்பு  ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் உயருவதற்குக் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் சரிவு போன்றவையே காரணமாக இருக்கும் என்றும் கணித்திருந்தது.

ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று கூறப்படுகிறது. 2016ம் ஆண்டு நவம்பரில் உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் 2017ம் ஆண்டு ஜூலையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது போன்ற காரணங்களால் இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றது.

ரிவடைந்தது. 2017 ல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவிகிதமாகவும், இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவிகிதமாகவும் இருந்தது. ஆனால் 2017-2018ம் ஆண்டில்  இந்தியாவில் முதலீடுகள் மற்றும் கொள்முதல்கள் அதிகரித்து வருவதாகவும்,  பொருளாதார வளர்ச்சி உயரும் எனவும் நம்பப்பட்டது.

ஆனால், எதிர்பார்த்த தொழில்வளர்ச்சி ஏற்படாத நிலையில்,  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி,   ஆசிய மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் வளர்ச்சி 2019ஆம் ஆண்டு 6.8 சதவிகிதத் திலிருந்து 6.3 சதவிகிதமாகச் சரியும் என்றும் ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

அதேவேளையில்,   இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவிகிதம் ஆக உயரும் என உலக வங்கி கணித்திருந்தது. தற்போது 6.7 % ஆக உள்ள பொருளாதார வளர்ச்சி 7.3% ஆக உயரும் என்றும் உலக வங்கி தெரிவித்திருந்தது.

அதுபோல சர்வதேச பொருளாதார ஆய்வறிக்கையில் 2019ஆம் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி யில் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளும் என்று தெரிவித்திருந்தது

ஆனால், நிதிநிலை அறிக்கைக்குப் பிறகு எதிர்பார்த்த அளவு நாட்டின் பொருளாதார வளர்ச்சி இல்லாமல் முடங்கிவரும் நிலையில், நிதி அமைச்சரை மாற்ற மோடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நிர்மலா சீத்தாராமன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.