டில்லி:

ன் விவிபாட் ஒப்புகை சீட்டுகளை முதலில் கணக்கிட கூடாது? தேர்தல் ஆணையம் ஒருமைப் பாட்டை கடைபிடிக்க வேண்டும், ஜனநாயகத்திற்காக  இதை செய்யுங்கள் என்று திரிணாமுல் கட்சி தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாடு முழுவதும்  மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல்  கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தொடங்கி, கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கான பணிகளை தேர்தல் ஆணையமும் தீவிரமாக செய்து வருகிறது. முதலில் தபால் வாக்குகளும், அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படவுள்ளன. இதையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் எக்சிட்போல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், 22 கட்சிகளை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு சென்று விவிபாட் ஒப்புகை சீட்டை முழுவதும் 100 சதவிகிதம் எண்ண வேண்டும் என்று மனு கொடுத்தனர். ஆனால், அதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் (TMC) தலைவர் தினேஷ் திரிவேதி மீண்டும் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் நேர்மை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக இந்திய தேர்தல் கமிஷனை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இவர் தனது அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் “காகித ஒப்புகை சீட்டை முதலில் கணக்கிடப்பட்டால் என்ன தீங்குஏற்படும் “என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஜனநாயகத்திற்கான முடிவை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளார்.