டில்லி

தேர்தல் நன்னடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மக்களவை மற்றும் நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அது முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்தன. அதனால் அனைத்து அதிகாரங்களும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப் பட்டன.

மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் எந்த ஒரு புதிய திட்டத்தையும் அறிவிக்க மற்றும் செயல்படுத்த தடை விதிக்கப்பட்டது. கடந்த 23 ஆம் தேதி அன்று அனைத்து மக்களவை தொகுதி வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அருணாசல பிரதேசம் சிக்கிம், ஆந்திரா, ஒரிசா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளும் வெளியாகி உள்ளன.

அதனால் தேர்தல் ஆணையம் தேர்தல் நன்னடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளபட்டதாக அறிவித்துள்ளது.