டில்லி:
மனித நேயம் மிக்க புதிய இந்தியாவைப் படைப்போம் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.
71வது இந்திய சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. இதையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பொதுமக்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர், “நமது நாட்டின் அடையாளமாகத் திகழும் பரஸ்பர மனிதநேயம் புதிய இந்தியாவிலும் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும், “அரசு சட்டங்களை இயற்றுப்போது அதனை பின்பற்றி நடக்க வேண்டியது மக்களின் கடமை. ஜி.எஸ்.டி.யை மக்கள் ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒவ்வொருவரும் நாட்டுக்கு வரி செலுத்துவதில் பெருமை கொள்ள வேண்டும். பிரதமர் கோரிக்கையை ஏற்று ஒரு கோடி பேர் கேஸ் மானியத்தைத் விட்டுக்கொடுத்துள்ளனர். இதனால், ஏராளமான ஏழை மக்களின் வீட்டு சமையல் அறைகளில் கேஸ் சிலிண்டர்கள் பயன்பாட்டு வந்திருக்கின்றன” என்று குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்தார்.