டில்லி:

‘‘எனது மகளை படிக்க வைத்திருக்க கூடாது. அதன் பிறகு அவரை ஐஐடி.யில் பயில அனுப்பியிருக்க கூடாது. இதற்கான செலவுகள் அனைத்தையும் வரதட்சனைக்காக சேர்த்து வைத்திருக்க வேண்டும்’’ என்று மனோஜ் தேவாக் என்பவர் டில்லி மருத்துவமனையில் உள்ள பிணவறை முன்பு அழுது புலம்பிக் கொண்டிருந்தார்.

அவரது மகள் மஞ்சுளா ஒரு சிவில் என்ஜினியர். அதோடு டில்லி ஐஐடி.யில் பிஎச்.டி பயின்று வந்தார். இவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரை போல் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை 54 பெண்கள் வரதட்சனை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடந்த 1961ம் ஆண்டு முதல் இந்தியாவில் வரதட்சனை கொடுக்கும் நடைமுறை உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இந்த நடைமுறை அதிகளவில் அதிகரித்துள்ளது.

டில்லி போலீசாரின் புள்ளி விபர அடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வரதட்சனை கொடுமை வழக்குகள் இரட்டிப்பாகியுள்ளது. 2012ம் ஆண்டில் 2 ஆயிரத்து 46 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளது. கடந்த ஆண்டில் 3 ஆயிரத்து 877 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதர கொலை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம், திருட்டு வழக்குகளில் எண்ணிக்கை 2012ம் ஆண்டு முதல் குறைந்துள்ளது அல்லது குறைந்த அளவில் அதிகரித்துள்ளது.

வரதட்சனை கொடுமை தொடர்பாக புகார் அளிக்காத சம்பவங்கள் அதிகளவில் நடந்துள்ளது. கடந்த ஆண்டில் முதல் 6 மாதங்களில் ஆயிரத்து 330 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் பாரம்பரிய தொடர்புகள் அறுந்து வருவதை இது காட்டுகிறது.

வரதட்சனை என்பது ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள காஸ் சிலிண்டரில் ஆரம்பித்து ஆடி க்யூ5 எஸ்யுவி கார் மற்றும் ரூ.2.5 கோடி ரொக்கம் என்ற அளவு வரை உள்ளது. இது ஏழை பெண்கள் முதல் படித்த உயர்மட்ட பெண்களுக்கு ஏற்ற பொருளாதார நிலை அடிப்படையில் நீடிக்கிறது.

இதில் அதிக புகார்கள் தேன்நிலவு காலத்திலேயே தொடங்கிவிடுகிறது. தாய்லாந்தில் ஒரு பெண் தன்னை காரில் வைத்து அடித்ததாக தெரிவித்துள்ளார். 50 வழக்குகளில் இயற்கைக்கு மாறான பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தியதாக பல பெண்கள் புகார் செய்துள்ளனர். மேலும், 5 வழக்குகள் கணவர் தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்ததாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.

தங்க நகைகள் கேட்டதாக 543 வழக்குகள், பிரிட்ஜ் கேட்டதாக 566 வழக்குகள், சோஃபா செட் கேட்டதாக 217 வழக்குகள், எல்இடி டிவி கேட்டதாக 26 வழக்குகள், ஃப்ளாட் மற்றும் நிலம் கேட்டதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

9 வழக்குகளில் ரூ.1 கோடிக்கு மேல் ரொக்கம் கேட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் கேட்டதாக 198 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ராயல் என்பில்டு புள்ளட்டிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வழக்கு ஆட்டோ ரிக்ஷா கேட்டதாகவும், மற்றொரு வழக்கு இரண்டு எருமை மாடுகள் கேட்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் அனைத்தும் விசாரணையில் உள்ளது. இந்த வழக்குகளில் பெரும்பாலானவற்றில் உண்மை தன்மை இல்லை என்று சட்ட வல்லுனர்கள், ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர். வரதட்சனை புகார்களில் கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தடை விதித்தது. இந்த சட்ட பிரிவை கேடயமாக பயன்படுத்த வேண்டும். ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்று கருத்து தெரிவித்திருந்தது.

இந்த புகார்களில் பெரும்பாலானவை உண்மை இல்லை என்ற கருத்து தெரிவிக்கப்பட்டாலும், ஆயிரக்கண க்கான நேர்மையான வரதட்சனை கொடுமைகள் புகார் அளிக்க வருவதில்லை.

முன்னாள் டில்லி போலீஸ் கமிஷனர் அஜய்ராஜ் சர்மா கூறுகையில்,‘‘ வரதட்சனை என்பது பழமையான நடைமுறையாக உள்ளது. ஏழையாக இருந்தாலும் மகளுக்கு தந்தையால் உதவி செய்யப்படுகிறது. நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் மத்தியில் கூட வரதட்சனை நடைமுறை உள்ளது. புகார்களில் குற்றச்சாட்டுக்கள் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது. 85 வயது மூதாட்டிற மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. 85 வயது மூதாட்டியால் என்ன செய்ய முடியும்’’ என்றார்.