திருநெல்வேலி

மிழகத்தில் இ பாஸ் முறை இப்போதைக்கு ரத்டு செய்யப்பட மாட்டாது என அறிவித்துள்ளார்.

நேற்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஒரு நிகழ்வில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.  அப்போது அவர் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 208.3 கோடி மதிப்பீட்டில் 8 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன் 31.04 கோடி மதிப்பில் நடந்து முடிந்துள்ள 19 திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது உரையில், “தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட அதிகமாக உள்ளது.

வரும் 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் தாமிரபரணி ஆறு, நம்பி அறு மற்றும் கருமேனி ஆறு நதி நீர் இணைப்புத் திட்டம் நிறைவேறும்.  தமிழகத்தில் குடி மராமத்து திட்டம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

கொரோனா தாக்கம் முழுமையாகக் குறைந்த பிறகு பொதுப் போக்குவரத்து தொடங்கும்.   அப்போது தான் இ பாஸ் முறை ரத்து செய்யப்படும்.  எனவே இப்போதைக்கு இ பாஸ் முறை ரத்து செய்யப்பட மாட்டாது.

இதனால் இ பாஸ் முறையை எளிமைப்படுத்த வசதியாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுள்ள்து.  இதற்காகக் கூடுதலாக ஒரு குழு செயல்பட உள்ளது” எனத் தெரிவித்தார்.