கம்பம் நாடு முழுவதும் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டு, பொதுப் போக்குவரத்துக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து கேரளா செல்வோரை, மாநில எல்லையான இடுக்கி மாவட்டத்தில், திருப்பி அனுப்பி கெடுபிடி செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.  இ-பாஸ் இருந்தால்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று இடுக்கி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து கேரளா செல்வதற்கு, குமுளி வழியாக இடுக்கி மாவட்டத்தின் வழியாக கேரளாவுக்குள் நுழைய முடியும்.  ஆனால், நாடு முழுவதும் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப் பட்டு உள்ளதால், அதை நம்பி, தமிழக்ததில் இருந்து ஏராளமானோர் கேரளாவுக்கு வேலைக்கு செல்லும் பணியை தொடங்கினர்.

ஆனால், அவர்கள் இடுக்கி மாவட்டம் எல்லையில் தடுத்து நிறுத்திய கேரள அதிகாரிகள், தமிழகத்தில் இருந்து வருபவர்களிடம் இ-பாஸ் தேவை என்றும், இல்லையேல் அனுமதிக்க முடியாது என்று கெடுபிடி செய்து திருப்பிஅனுப்பி வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கூறி, இடுக்கி மாவட்ட நிர்வாகம், கேரளாவில் இ-பாஸ் நடைமுறை அமலில் இருப்பதாகவும், இதுவரை விலக்கப்படவில்லை. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தடுக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்து உள்ளது.

மத்தியஅரசு அறிவிப்பை கேரள அரசு மதிக்காமல் நடந்துகொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.