டெல்லி: தபால் நிலைய சேமிப்பு கணக்கு விதிமுறைகளில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்கள் விதிகளைப் பின்பற்றாவிட்டால், அவர்களுக்கு இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தபால் துறை தபால் அலுவலகக் கணக்கில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை ரூ.50 ஆக இருந்து வந்த நிலையில், தற்போது குறைந்த பட்ச இருப்பு தொகை ரூ.500 ஆக உயர்த்தியுள்ளது.

வங்கிகளைப் போல தபால் நிலையமும் குறைந்த பட்ச இருப்பை தொகையை ரூ.500ஆக உயர்த்தி இருப்பது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தபால்துறை சேமிப்பு கணக்கில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள்:

குறைந்த பட்ச இருப்பு தொகை ரூ.50ஐ, ரூ.500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

உங்கள் கணக்கில் பூஜ்ஜிய இருப்பு இருந்தால் (இருப்பு ஏதும் இல்லாத நிலை) இருந்தால், அவர்களின்  கணக்கு தானாக மூடப்படும்.

தபால் அலுவலகம் தற்போது தனிநபர் / கூட்டு சேமிப்புக் கணக்குகளுக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டியை செலுத்துகிறது.

சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.500 இருப்பு வைத்திருப்பது அவசியம்.

அரசாங்க மானியத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், உங்கள் தபால் அலுவலகக் கணக்கை ஆதார் உடன் இணைக்க வேண்டும்.

மக்கள் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் நேரடி நன்மை பரிமாற்றத்தை (டிபிடி) பெறலாம் என்று தபால் துறை தெரிவித்துள்ளது

நெடுவரிசை கணக்கு திறப்பு பயன்பாட்டில் அல்லது சான்றிதழ் படிவத்தை வாங்குவதில் ஆதார் உடன் இணைக்க புதிய நெடுவரிசையையும் நீங்கள் காணலாம்.

ஏற்கனவே கடந்த 2012-13ம் ஆண்டு நாடு முழுவதும் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வசதிகள்  தொடங்கப்பட்டது. அப்போது பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி,  காசோலை இல்லாமல் ஒரு கணக்கில் குறைந்தபட்சம் ரூ.50 / இருக்க வேண்டும் என்றும், ஆண்டுக்கு ரூ.10,000 வரை வட்டி வரி விலக்கு என பல் சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

ஆனால், தற்போது குறைந்தபட்ச இருப்பு தொகையை ரூ.500 ஆக உயர்த்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.