ரூர்

ரூர் நகரில் வருமான வரிச் சோதனை நடக்கும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் நடந்து வருகிறது. இதற்கான காரணம் வெளியாகவில்லை. இன்று காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரி நகரின் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெற்ற இடத்தில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளைச் சிலர் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். அவர்கள் அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கண்ணாடியை உடைத்தவர்களில் ஒருவரை வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. எனினும் இந்த எதிர்ப்பு காரணமாக அதிகாரிகள் அப்பகுதியில் இருந்து புறப்பட்டனர்.

வருமான வரித்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு கருதி அவர்கள் கரூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  இந்நிலையில் மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்ட திமுவினர் அங்கே திரண்டதால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.