மதுரை
இன்று நடைபெறும் பணிமனை மறுசீரமைப்பு பணிகளை முன்னிட்டு ரயில்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன.
இன்று திருச்சி ரயில் நிலையத்தில் உள்ள ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனையில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் அந்த பாதையில் இயக்கப்படும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி மதுரை வழியாக இயக்கப்படும் தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16352) இன்று (ஞாயிற்றுக்கிழமை) திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதனால் திருத்தணி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16127) விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் (வ.எண்.16128) இன்று விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
இன்று மயிலாடுதுறை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16847) திருவாரூர், காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16848) இன்று விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர் வழியாக மயிலாடுதுறை செல்லும்.
இன்று ராமேசுவரம்-புவனேசுவரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.20895) காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும். மதுரை-சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.22672) இன்று மதுரையிலிருந்து மாலை 3 மணிக்குப் பதிலாக மாலை 4.15 மணிக்குச் சென்னை புறப்படும்.