லண்டனில் கடும் வெப்பம் : மேல் சட்டையின்றி நடமாடும் ஆண்கள்

Must read

ண்டன்

ரண்டு நாட்களாக லண்டனில் கடும் வெப்பம் நிலவுவதால் பல ஆண்கள் மேல் சட்டை இன்றி நடமாடி வருகின்றனர்.

 

எப்போதும் மிகவும் குளிர் நிலவும் இங்கிலாந்து நாட்டில் தற்போது கடும் கோடை நிலவி வருகிறது. தற்போது லண்டன் உள்ளிட்ட பல நகரங்களில் வெப்பம்  38.1 டிகிரி செண்டிகிரேட் அதாவது 100.8 டிகிரியை தாண்டி உள்ளது. இங்கிலாந்தில் இவ்வளவு வெப்பம் இதுவரை நிலவியது கிடையாது. அதனால் மக்கள் மிகவும் தவித்து வருகின்றனர்.

 

 

லண்டனில் நிலத்துக்கடியில் மற்றும் மேம்பாலங்களில் செல்லும் ரெயில்கள் உள்ளன. இந்த ரெயில்களில் பயணம் செய்வோரில் பல ஆண்கள் தங்களது  மேல் சட்டையைக் கழற்றி விட்டு பயணம் செய்து வருகின்றனர்.

இதில் ஒரு ஆண் அதிகபட்ச நிலைக்குச் சென்று கால்சட்டையையும் கழற்றிவிட்டு வெறும் உள்ளாடையுடன் பயணம் செய்துள்ளார்.

 

தெருக்களில் மேல் சட்டை இன்றி ஆண்கள் நடமாடுவது சகஜமாக உள்ளது. பெண்கள் மிகக் குறைந்த அளவுள்ள ஆடைகளை அணிந்த போதிலும் கையில் விசிறியுடன் அலைகின்றனர்.

பல நீச்சல் குளங்களில் ஆட்கள் அலை மோதுவதால்  காவல்துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

More articles

Latest article