எண்ணெய் விலை அதிகரிப்பை தடுக்க முயலுங்கள் – சவூதியிடம் கேட்டுக்கொண்ட இந்தியா

Must read

புதுடெல்லி: எண்ணெய் விலை அதிகரிப்பை தடுக்கும் வகையில் சவூதி அரேபியா அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

அதேசமயம், எண்ணெய் வாங்கும் நாடுகளும் பிரச்சினையற்ற எண்ணெய் போக்குவரத்திற்கு தங்களால் ஆன பங்களிப்பை ஆற்ற வேண்டுமென்று சவூதி அரேபியாவும் கேட்டுக்கொண்டுள்ளது.

ஈரானுக்கு அருகிலுள்ள ஹோர்முஸ் கடற்பகுதியில் நிலவும் சிக்கலின் அடிப்படையிலேயே இந்தக் கருத்து பகிரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், சவூதி அரேபிய பெட்ரோலிய அமைச்சர் காலித் அல்-ஃபாலியிடம் அறிவுறுத்தினார். சமீபகாலங்களில், ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஹோர்முஸ் நீரிணை, உலக எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஐந்தாவது முக்கிய வழியாக திகழ்கிறது. ஹார்முஸ் பகுதி சிக்கலினால் எண்ணெய் விலையில் ஏற்படும் திடீர் ஏற்றத்தினால், இந்தியா போன்ற நாடுகளில் அது பலவிதமான எதிர்மறை விளைவுகளை உண்டாக்குவதாக தனது கவலையை இந்தியா, சவூதி அரேபியாவிடம் பகிர்ந்து கொண்டது.

More articles

Latest article