இஸ்லாமாபாத்:

ந்தியாவுடன் முரண்டு பிடித்து வரும் அண்டை நாடான பாகிஸ்தான், சுமார் ரூ.250 மதிப்பிலான மருந்து பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு தொடர்பாக பிரச்சினைகள் தொடர்ந்து வரும் நிலை யில், பாகிஸ்தான் நாட்டின்,  உற்பத்தி பற்றாக்குறையால், இந்தியாவிலிருந்து 250 கோடி மதிப்பி லான தடுப்பூசிகளை பாகிஸ்தான் இறக்குமதி செய்துள்ளது.

இதுவரை வெளிநாடுகளில் இருந்து தடுப்பு மருந்துகளை பாகிஸ்தான் இறக்குமதி செய்து வந்த நிலையில், தற்போது இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது.கடந்த 16 மாதங்களில் 3.6 கோடி டாலர் மதிப்பிலான வெறிநாய் தடுப்பு மற்றும் விஷமுறிவு மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில், பாகிஸ்தான் செனட் உறுப்பினர் ரஹ்மான் மாலிக் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, தேசிய சுகாதார சேவை அமைச்சகம் செனட் நிலைக்குழுவில் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.

பாகிஸ்தானில் தேசிய சுகாதார நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்கள் சில மேற்கண்ட தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்கின்றன. ஆனால், தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு உற்பத்தி இல்லை. மேலும் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் இந்தியாவில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.