பெங்களூரு

ன்ஃபோசிஸ் நிறுவன அமைப்பாளர் நாராயண மூர்த்தியின் மருமகன்  ரிஷி சுனாக் இங்கிலாந்து அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார்.

புகழ்பெற்ற ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவன அமைப்பாளர் நாராயண  மூர்த்தியின் மகள் அட்சதா.  இவர் இங்கிலாந்து நாட்டில் உள்ள இந்திய வம்சாவழியை சேர்ந்த ரிஷி சுனாக் என்பவரின் மனைவி ஆவார்.   இவர் இங்கிலாந்து நாட்டில் வடக்கு யார்க்‌ஷையர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.

தற்போது இங்கிலாந்து பிரதமராகி உள்ள போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் ரிஷி சுனாக் கருவூல அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.   இவர் ஏற்கனவே வீட்டு வசதி அமைச்சரவையில் செயலராகப் பணி புரிந்துள்ளார்.   இவருக்கு கிருஷ்ணா, அனுஷ்கா என இரு மகள்கள் உள்ளனர்.   இவர் அமைச்சராகி உள்ளதற்கு நாராயண மூர்த்தி மற்றும் அவர் மனைவி சுதா மூர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

ரிஷி சுனாக் தனது இணைய தளத்தில், “எனது முன்னேற்றத்துக்காக எனது பெற்றோர் என்னை நல்ல கல்வி நிலையங்களில் சேர்த்தனர்.   நான் வின்செஸ்டர் கல்லூரி, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம், ஸ்டான்ஃபோர்ட் அல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் கல்வி கற்றுள்ளேன்.  இதனால் எனது வாழ்க்கை அமைப்பு மிகவும் மாறியது.   எனது முன்னேற்றத்துக்கு அரும்பாடு பட்டு உழைத்த எனது பெற்றோருக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிந்துள்ளார்.