டில்லி

ரண்டாம் அலை கொரோனா தாக்குதலுக்கான அறிகுறிகளால் உலக நாடுகள் கடுமையாக பாதிகப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு உலக நாடுகள் அனைத்திலும் அதிகரித்து வருகிறது.  இது கொரோனா தாக்குதலின் 2 அலையின் அறிகுறிகள் என அஞ்சப்படுகிறது.   தினசரி கொரோனா பாதிப்பு உலக அளவில் 4.9 லட்சத்தை நெருங்குகிறது.  நேர்றுவரை 12,47,90,055 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 27,45, 391 பேர் உயிர் இழந்து 10,08,21,005 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 2,12,23,859 பேர் சிகிச்சையில் உள்ளன்ர்.

இதில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  இங்கு சுமார் 59 ஆயிரம் பேர் நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நேற்று வரை 3.06 கோடி பேர் பாதிக்கப்பட்டு 5.57 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதில் 2,30 லட்சம் பேர் குணம் அடைந்து தற்போது 7.04 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாவதாக பிரேசில் உள்ளது. இங்கு நேற்று ஒரே நாளில் 85 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.21 கோடியை தாண்டி உள்ளது.  இதில் 2.99 லட்சம் பேர் உயிர் இழந்து 10.06 கோடி பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1.24 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா உள்ளது.  இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 47,264 பேருக்கு பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  நேற்று வரை 1,17,33,594 பேர் பாதிக்கப்பட்டு அதில் 1,60,477 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,12,03,016 பேர் குணம் அடைந்து 3,70,101 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதற்கடுத்த வரிசையில் முறையே ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், துருக்கி மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன.