திருப்பதி

த்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையையொட்டி திருப்பதி கோவிலில் 13,14,15 ஆகிய தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் கொரோனா அச்சுறுத்தலால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  ஏற்கனவே முன்பதிவு செய்து கொண்ட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.  தவிர வி ஐ பி தரிசனம் என்னும் முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“வரும் 14 ஆம் தேதி திருப்பதியில் தென்மாநில முதல்வர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநில முதல்வர்களும் மற்றும் அந்தமான், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்களும் பங்கேற்க உள்ளனர்.

இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 13, 14, 15 ஆகிய 3 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இம் மூன்று தினங்களுக்குத் தரிசனம் மற்றும் அறைகள் பெறுவதற்கான முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களும் ஏற்கப்படாது. மேலும் நன்கொடை வழங்கிய பக்தர்களுக்கும் அறைகள் ஒதுக்கீடு கிடையாது.  ரூ.300 மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகளை இணையத்தில் பெற்ற பக்தர்கள் வழக்கம் போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.”

என கூறப்பட்டுள்ளது.