குழந்தைகளுக்கு தொண்டை அடைப்பான், டெட்டனஸ், கக்குவான் இருமல் என மூன்று நோய்களும் வராமல் தவிர்க்க போடப்படும் முத்தடுப்பு ஊசி என்றழைக்கப்படும் டி.டி.பி (DTP) ஊசி போடுவது இந்தியாவில் குறைந்து விட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு இந்தியாவில் மட்டும் 2.3 கோடி குழந்தைகளுக்கு முதல் தவணை டி.டி.பி தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக அளவில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம் என்றும் கூறியிருக்கிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ராஸ் “மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அக்கறை காட்டி வருகின்றனர், இதில் தங்கள் குழந்தைகளைப் பாதிக்கக்கூடிய ஆனால் கட்டுப்படுத்தக்கூடிய நோய்களான அம்மை, போலியோ அல்லது மூளைக்காய்ச்சல் அதிக பாதிப்பு ஏற்படுத்த நோய்களுக்கு தடுப்பூசி போடுவதை நிறுத்தக் கூடாது” என்று கூறியிருக்கிறார்.