கொரோனா இரண்டாம் அலையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொத்துக்கொத்தாக உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், குஜராத், ம.பி. உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறி மரணத்திலும் அரசியல் செய்தது பா.ஜ.க. அரசு.

உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா விதிமுறைகளோடு பாதுகாப்பு துணிகளுடன் புதைக்கப்பட்ட சடலங்கள் பல்வேறு இடங்களில் குவியல் குவியலாக இருந்ததை படம் பிடித்துக் காட்டிய பத்திரிக்கை நிருபர்கள், கங்கை நதியில் சடலங்கள் மிதந்து செல்வதையும் படம் பிடித்துக் காட்டினர்.

இதனைத் தொடர்ந்து, அந்த சடலங்கள் மீது போர்த்தப்பட்டிருந்த துணிகளை அகற்றியதோடு, அவை அனைத்தும் சாதாரண மரணங்களே என்று கூறினர்.

இதுகுறித்து அப்போது கருத்து தெரிவித்திருந்த ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், உ.பி. அரசு பிணத்திலும் அரசியல் செய்கிறது என்று கூறியிருந்தார்.

அவரது பேச்சு உண்மை தான் என்று நிரூபிப்பதைப் போல தமிழக பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் சௌதா மணி வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவு உள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் மரணம் குறித்து காழ்ப்புணர்வுடன் வெளியிட்டிருக்கும் இந்த பதிவு பத்திரிகையாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பா.ஜ.க. வை சேர்ந்த ஒருவரின் இதுபோன்ற பொறுப்பற்ற பதிவை தமிழக பா.ஜ.க. தலைவரோ அல்லது தேசிய தலைமையோ கண்டிக்காமலும் கண்டுகொள்ளாமலும் இருப்பது கவலையளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டது குறித்து ஐ.நா. சபையில் புகாரளிக்கப் போவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.