சென்னை: போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர்சாதிக்குக்கு ஹவாலா கும்பலுடன் தொடர்பு உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோத சம்பாதித்த பணம் தொடர்பாக, அவரிடம் தொடர்புகொண்டவர்களிடமும் விசாரணை நடத்த தேசிய போதை பொருள் தடுப்புத்துறை தீவிரமாக செயலாற்றி வருகிறது.

டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சூடோ பெட்ரின் என்கிற போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்த தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியான ஜாபர்சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 4 பேரும் கைதாகியுள்ளனர். போதைப் பொருள் கடத்தல் மூலமாக ஜாபர்சாதிக் ரூ.2 ஆயிரம் கோடியை சுருட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் சட்ட விரோதமாக சம்பாதித்த பணத்தைக்கொண்டு, ஆடம்பரமாக ஹோட்டல், சினிமா தயாரிப்பு என பல்வேறு வகையில் முதலீடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஹவாலா பணத்தை பரிமாற்றம் செய்தது தொடர்பாக ஜாபர்சாதிக், மண்ணடியை சேர்ந்த தரகருடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்,  ஹவாலா பணப்பரிமாற்ற கும்பலுடன் ஜாபர்சாதிக்குக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜாபர் சாதிக், டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சூடோ பெட்ரின் என்கிற போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இந்த போதைப் பொருள் கடத்தல் மூலமாக ஜாபர்சாதிக் ரூ.2 ஆயிரம் கோடியை சுருட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும், போதை பொருள் தடுப்புத்துறை,  ஹவால தரர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும்,  மேலும்,  சினிமா உலகில் ஜாபர் சாதிக் மற்றும் அமீருடன்  நெருக்கமாக இருந்த மேலும் பலரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இதற்கிடையில் ஜாபர் சாதிக் போதைபொருள் கடத்தல் மூலம்,  சட்ட விரோதமாக சம்பாதித்த பணத்தை ஜாபர்சாதிக் சினிமா மற்றும் ஓட்டல் தொழிலில் முதலீடு செய்திருப்பது அம்பலமானது. இது தொடர்பாக சினிமா இயக்குனர் அமீரிடம் டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சினிமா உலகில் ஜாபர் சாதிக்குடன் நெருக்கமாக இருந்த மேலும் பலரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது

இந்த நிலையில் ஜாபர்சாதிக் ஹவாலா பணப்பரிமாற்றத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பான தகவல்களை அவர்கள் திரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை மண்ணடியை சேர்ந்த ஹவாலா பணப்பரிமாற்ற தரகர் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஹவாலா பணத்தை பரிமாற்றம் செய்தது தொடர்பாக ஜாபர்சாதிக், மண்ணடியை சேர்ந்த தரகருடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து அதன் பின்னணி தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக முதல்கட்ட குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இந்த வழக்கில், சூடோபெட்ரின் வேதிப்பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்ட கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி இதில் இருந்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், அதை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலேயே போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் அவசரம் அவசரமாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த குற்றப்பத்திரிகை மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

இந்த நிலையில்,   போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிள் இந்த வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட இயக்குனர் அமீரிடம் விசாரணை நடத்தப்பட்டபோது கிடைத்த தகவல்களைக் கொண்டு மேலும் பலரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.  அதற்காக,  ஜாபர் சாதிக்கின் குரல் மாதிரிகளை கோர்ட்டில் அனுமதி பெற்று பதிவு செய்துள்ளனர். அவை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளன. செல்போனில் பதிவானது அவரது குரல்தான் என்பதை பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திய பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கபட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்,  . ஜாபர் சாதிக்கின் செல்போன் உரையாடல்களில் பண விவகாரங்கள், பணபரிமாற்றங்கள் பற்றியும் பேசப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதுபற்றி அவருடன் பேசிய நபர்களை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். குரல் மாதிரி பரிசோதனை முடிவுகள் வந்ததும் சம்பந்தப்பட்ட அந்த நபர்களிடம் விசாரணை நடத்த இருக்கிறார்கள். இதன்படி இயக்குனர் அமீரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

இதற்கிடையே அமலாக்கத்துறை அதிகாரிகளும் இதனை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளிடம் குரல் பரிசோதனை அறிக்கைகளைப் பெற்று, அதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களை  வளைக்கவும் தேசிய போதை பொருள் தடுப்புத்துறை தீவிரமாக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் விவகாரம்: எடப்பாடி, அண்ணாமலை மீது முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு வழக்கு…