கொச்சியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானம் மூலம் பயணம் செய்த நடிகை அம்பிகா-வுக்கு விமானத்தில் விபரீத அனுபவம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அவசர வழி-க்கு அருகில் இருந்த சீட்டு எனக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

அதில் அமர்ந்த போது அதில் இருந்த சீட் பெல்ட் பாதி மட்டுமே இருந்ததை கவனித்தேன்.

இது தொடர்பாக விமானப் பணியாளரிடம் தெரிவித்ததற்கு அவர் அதை பெரிதாக பொருப்படுத்தாமல் “நாங்கள் இருக்கிறோம் கவலைப்படாதீர்கள்” என்று தெரிவித்தார்.

விமானம் திடீரென அவசரமாக தரையிறங்க நேரிட்டால் சீட் பெல்ட் இல்லாமல் கீழே விழ நேரிடும் என்பதால் நான் வேறு சீட் மாற்றி தருமாறு கேட்டதற்கு ஏதாவது சீட் இருந்தால் சொல்லுங்கள் என்று கூறிவிட்டனர்.

பின்னர், ஒரு சீட் காலியாக இருப்பதைப் பார்த்து நான் அந்த சீட்டுக்கு மாறிச் சென்றேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், இண்டிகோ விமானத்தின் பராமரிப்பு சரியில்லை என்று பதிவிட்டுள்ள அவர் அதன் பணியாளர்களின் எதைப்பற்றியும் கவலைப்படாத மனநிலை மிகவும் மோசமாக உள்ளதாக அதில் குற்றம்சாட்டியுள்ளார்.