போதைப்பொருள் வழக்கில் நடிகை ரியாவுக்கு ஜாமின்! மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

Must read

மும்பை: போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. ஏற்கனவே சிறப்பு நீதிமன்றம்  அவருக்கு ஜாமீன் வழக்க மறுத்த நிலையில், தற்போது மும்பை உயர்நீதி மன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ள நிலையில், அவருக்கு போதைப்பழக்கம் இருந்ததாகவும், அவரது காதலியே அவருக்கு பேதைப்பொருள் வாங்கிக்கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோதியை  போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்  கைது செய்து சிறையில்அடைந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதை பொருள் வாங்கியது உண்மை என்று ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.

அதைத்தொர்ந்து,  ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.  மனுவை விசாரித்த நீதிமன்றம் ரியா சக்ரவர்த்தியின் மனுவை நிராகரித்தது. அடுத்த 14 நாட்கள் ரியா சிறையில் கண்காணிக்கப்படுவார் என உத்தரவிடப்பட்டது. பின்னர் பைக்காலாவில் உள்ள பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து,   ரியாவின் வழக்கறிஞர்கள் ஜாமீனுக்காக மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.  இநத் மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், அவருக்கு ஜாமின் வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு குறித்து கூறிய ரியாவின் வழக்கறிஞர்,  , “ரியா சக்ரவர்த்திக்கு ஜாமீன் வழங்கிய பம்பாய் உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உண்மையும் நீதியும் மேலோங்கியுள்ளன. ரியா கைது செய்யப்படுவதும் காவலில் வைப்பதும் முற்றிலும் தேவையற்றது மற்றும் சட்டத்திற்கு அப்பாற்பட்டது என தெரிவித்து உள்ளார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article