சென்னை: மத்தியஅரசு அகில இந்திய வானொலி நிலையங்களை மூடும் முடிவை கைவிட வேண்டும் என  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

டிஜிட்டல் வளர்ச்சியின் காரணாக, பொதுமக்கள் வானொலி நிகழ்ச்சிகளை கேட்பதை தவிர்த்து வருகின்றனர். இதனால், வானொலி நிலையங்கள் விளம்பரமின்றி நிதிப்பற்றாக்குறையால் தள்ளாடுகின்றன. இதனால், மத்தியஅரசு அகில இந்திய வானொலி நிலையங்களை மூடும்  நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, கடந்த 2019 ஆண்டு 5 மாநிலங்களில் மத்தியஅரசின் கட்டுப்பாட்டில் உள்ள அகில இந்திய வானொலி நிலையங்களை முடியது.

2019 ஜனவரி முதல் கேரளாவின் திருவனந்தபுரம், மேகாலயாவின் ஷில்லாங், குஜராத்தின் ஹைதராபாத் , தெலுங்கானாவின் ஐதராபாத் மற்றும் உத்தர பிரதேசத்தின் லக்னோ ஆகிய நகரங்களில் தேசிய ஒலிபரப்பு சேவையை நிறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்த மற்ற மாநிலங்களிலும் உள்ள வானொலி நிலையங்களையும் மூட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், அகில இந்திய வானொலி நிலையங்களை மூடும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கூறியுள்ளது.  வானொலி நிலையத்தில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் பணியாளர்களை இம்முடிவு அச்சப்படுத்தியுள்ளது. தமிழ் ஒளிபரப்பை அதிகப்படுத்த யோசனைகளை முன்வைக்க குழு அமைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மத்தியஅரசால் 1939ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது அகில இந்திய வானொலி நிலையம். 832 ஆண்டுகளைக் கடந்தும்,  262 ஒலிபரப்பு மையங்களுடன் இயங்கி வருகிறது. நாட்டின் 99.18% மக்களை சென்றடையும் ஒரே ஊடகமாக அகில இந்திய வானொலி,  விளங்கு கிறது.  அகில இந்திய வானொலியே உலகின் மிகப்பெரிய வானொலி சேவையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியும் மான்கி பாத் எனப்படும் மக்களின் குரல் நிகழ்ச்சியும் வானொலியிலேயே ஒலிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில், அகில இந்திய வானொலி நிலையம் மூடப்படுவதாக வந்துள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  வானொலி நிலையங்கள் மூடப்படுவதால் அதில் பணிபுரியும் ஊழியர்களின் நிலையும் கேள்விக்குறி ஆக உள்ளது.  அரசின்  சிக்கன நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மூடப்படும் வானொலி நிலையங்களில் சேமிக்கப்பட்டுள்ள இதுவரை ஒலிபரப்பான நிகழ்ச்சிகளின் தொகுப்பு டெல்லியில் உள்ள ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பி பாதுகாப்பாக வைக்கப்படும் என பிரசார் பாரதி தெரிவித்துள்ளது.