திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில், புகையிலைப் பொருட்களான குட்கா, பான்மசாலா போன்ற போதைதரும்  பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த பொருட்களை தயார் செய்வதும், விற்பதும் தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. ஆனால், தடைடைய மீறி குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை வெகுஜோராக நடைபெற்று வருகிறது. இதற்கு அரசியல் கட்சியினரும், காவல்துறையினரும் துணைபோவதாக புகார்கள் உள்ளன.

இந்த நிலையில்,  திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் அருகே காவல்துறையினர் நடத்திய சோதனையில் கவுண்டர்பாளையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள 6 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கண்டெய்னர், சரக்கு வாகனங்களில் கடத்திவரப்பட்ட குட்கா பொருட்களை  பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.