சிஏஏ பரபரப்பிற்குப் பிறகு வங்கதேசத்தில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையில் பெரும் சரிவு!

Must read

புதுடில்லி: குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததால் பங்களாதேஷில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

சிஏஏ விற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, டாக்கா ட்ரிப்யூன் மேற்கு வங்காளத்தின் தெற்கு தினாஜ்பூரில் உள்ள ஹிலி குடிவரவு சோதனைச் சாவடி மூலம் வங்கதேசத்தில் இருந்து பார்வையாளர்களின் வருகையை கிட்டத்தட்ட 50% குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக தினசரி வங்கதேசத்தில் இருந்து குறைந்தது 800 பார்வையாளர்கள் வருகை தந்ததாக சோதனைச் சாவடியினை ஆய்வு செய்த செய்தியறிக்கை தெரிவித்தது அந்த அறிக்கையின்படி, தற்போது இந்த வருகை தினசரி 300 ஆகக் குறைந்துவிட்டதாக ஹிலி சோதனைச் சாவடி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ரயில் ரத்து போன்ற வளர்ந்து வரும் சிரமங்களை பார்வையாளர்கள் மேற்கோள் காட்டி பயணத் திட்டங்களை ரத்து செய்ய நிர்பந்திக்கப்பட்டிருப்பதாகக் கூறினர்.

808 இந்தியர்கள் வங்கதேசத்துக்குச் சென்ற டிசம்பர் முதல் பதினைந்து நாட்களில் பங்களாதேஷிலிருந்து 3,383 பார்வையாளர்கள் இந்தியாவுக்கு வந்ததாக ஹிலியில் உள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இரண்டாவது பதினைந்து நாட்களில், பங்களாதேஷ் குடிமக்களின் எண்ணிக்கை 1,832 ஆகவும், இந்தியர்களின் எண்ணிக்கை 47 ஆகவும் சரிந்தது.

“பங்களாதேஷில் மக்கள் இங்குள்ள நிலவரங்களைக் கவனித்து வருகிறார்கள். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக அசாம் மற்றும் வங்காளத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் அறிக்கையைப் பார்க்கும்போது அத்தியாவசியமற்ற வருகைகளை தற்காலிகமாக ஒத்திவைக்கின்றனர்” என்று இராஜதந்திர வட்டாரம் கூறியது,

இருதரப்பு உறவுகளைப் பற்றிய பொதுமக்களின் பார்வையில் ஒரு சரிவு உட்பட பல காரணங்களுக்காக பார்வையாளர்கள் குறைந்து வருவதாக வங்கதேச அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு அதிகாரி உள்துறை மந்திரி அமித் ஷா புலம்பெயர்ந்தோரை “கரையான்கள்” என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்டது “வங்கதேசத்தவர்களைப் புண்படுத்தும்” என்று குறிப்பிட்டார்.

 

More articles

Latest article